Skip to main content

விஸ்வாசம் பின்னணி இசையை திருடிய பாலிவுட் படம்... 

Published on 26/09/2019 | Edited on 26/09/2019

சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் ரித்தேஷ் தேஷ்முக் இணைந்து நடித்துள்ள மர்ஜவான் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. தற்போது இந்தியளவில் ட்ரெண்டாகியுள்ளது. மிலாப் ஜவேரி இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஆறு இசையமைப்பாளர்கள் தனி தனியே பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்கள்.
 

viswasam

 

 

இந்நிலையில் வெளியான ட்ரைலரில் விஸ்வாசம் படத்தின் தீம் மியூசிக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து இசையமைப்பாளர் டி.இமான் ட்வீட் செய்துள்ளார். அதில், “தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்தோ, மியூசிக் லேபல் தரப்பிலிருந்தோ என்னுடைய தீம் மியூசிக்கை பயன்படுத்தியதற்கான எந்தவொரு முன்னறிவிப்பும் கொடுக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், யூ-ட்யூபில் வெளியிட்டுள்ள வீடியோ டிஸ்கிரிப்ஷனில் ட்ரைலர் பேக்ரவுண்ட் மியூசிக் டி.இமான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இப்ப வேதாளம்.. நெக்ஸ்ட் தூக்கு துரை.. - அஜித்தை விடாத சிரஞ்சீவி

Published on 20/01/2023 | Edited on 20/01/2023

 

chiranjeevi next is ajith viswasam movie remake

 

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடித்த 'வால்டர் வீரய்யா' படம் அண்மையில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து தற்போது அஜித் நடித்த 'வேதாளம்' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'போலா ஷங்கர்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்க தங்கை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மெஹர் ரமேஷ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது. 

 

சமீபகாலமாக ரீமேக் படங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் சிரஞ்சீவி விஜய் நடித்த 'கத்தி' படத்தை 'கைதி நம்பர் 150' என்ற தலைப்பிலும், மோகன்லால் நடித்த 'லூசிஃபர்' படத்தை 'காட்ஃபாதர்' என்ற தலைப்பிலும் தெலுங்கில் ரீமேக் செய்தார். அந்த வகையில், தற்போது அஜித்தின் 'வேதாளம்' பட ரீமேக்கை தொடர்ந்து, மீண்டும் ஒரு படத்தை ரீமேக் செய்ய முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

அஜித், நயன்தாரா நடிப்பில் சிவா இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த 'விஸ்வாசம்' படத்தை ரீமேக் செய்ய உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இப்படத்தை 'கைதி நம்பர் 150' இயக்கிய வி.வி.விநாயக் இயக்கவுள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

 

 

Next Story

”மரியாதைக்காக செய்தால்கூட அதை அஜித் விரும்பமாட்டார்” - அஜித் குறித்து நெகிழ்ந்த வெள்ளப்பாண்டி

Published on 22/03/2022 | Edited on 22/03/2022

 

 Vellai Pandi

 

திருமகன், சிவப்பதிகாரம், கருப்பசாமி குத்தகைக்காரர், விஸ்வாசம், அண்ணாத்த உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துப் பிரபலமான வெள்ளப்பாண்டி, தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வள்ளி திருமணம் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். அந்த சீரியலுக்கான ஷூட்டிங்கில் பிஸியாக இருந்த அவரை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பகிர்ந்து கொண்ட வெள்ளப்பாண்டி, அஜித்துடனான விஸ்வாசம் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...  

 

”விஸ்வாசம் படத்தில் அஜித் சாருக்கு அப்பாவாக நடித்திருந்தேன். என் வாழ்க்கையில் சொந்த அப்பாவிடம்கூட நான் அவ்வளவு நெருக்கமாகப் பழகியதில்லை. ரொம்ப எளிமையான மனிதர். மிகவும் பாசக்கார பையன். தலைக்கணம் இல்லாத ஈவிரக்கம் கொண்ட மனிதர். அவங்க ஷாட் முடிந்த உடனே எல்லோரும் கேரவனுக்குள் சென்றுவிடுவார்கள். ஆனால், அஜித் நம் பக்கத்திலேயே உட்கார்ந்து பேசிக்கொண்டு இருப்பார். அவர் பக்கத்தில் வரும்பொழுது மரியாதைக்காக எழுந்து நின்றால்கூட, நீங்கள் அப்பா, நான் பையன், நீங்கள் போய் எழுந்து நிற்கலாமா என்பார். 

 

ஞாயிற்றுக்கிழமை என்றால் அவர் கையாலே அனைவருக்கும் பிரியாணி சமைத்துக் கொடுப்பார். நிறைய பேருடன் சேர்ந்து நடித்திருந்தாலும் அஜித்துடன் இணைந்து நடித்ததை மறக்க முடியாது”. இவ்வாறு வெள்ளப்பாண்டி தெரிவித்தார்.