viswasam

Advertisment

பொங்கல் பண்டிகையின் விடுமுறையை முன்னிட்டு அஜித் நடிப்பில் விஸ்வாசமும், ரஜினி நடிப்பில் பேட்ட படமும் கடந்த 10ஆம் தேதி ரிலீஸானது. படம் வெளியான நாள் முதலே இந்த இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில், இந்த இரண்டு படக்குழுவும் அதிகாரப்பூர்வ வசூலை தெரிவித்துள்ளது.

முதலில் ரஜினியின் பேட்ட படம், உலகம் முழுவதும் 100 கோடி வசூல் செய்திருந்தது என்று தகவல் வெளியாக. அதனை தொடர்ந்து விஸ்வாசம் படம் தமிழ் நாட்டில் மட்டுமே 125 கோடி வசூலை வாரி குவித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த இரு படங்களில் தமிழ்நாட்டில் விஸ்வாசம் நல்ல ஓட்டமும், அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் பேட்ட படமும் வசூலை வாரி குவித்து வருவதாக வெளியான தகவல் தற்போது உறுதியாகியுள்ளது.

Advertisment

இவ்விரு படத்தின் தயாரிப்பாளர்களும் ட்ரைலரில் போட்டிபோட்டுகொண்டது போலவே, யார் வசூல் வேட்டையில் முதலிடம் என்று போட்டிபோட்டு தகவல்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் நூறு கோடியை 11 நாட்களில் வசூல் செய்த படம் பேட்ட என்று திருப்பூர் சுப்ரமணியன் தெரிவிக்க,தமிழ்நாட்டில் மட்டும் விஸ்வாசம் 125 கோடி என்று விஸ்வாசம் படத்தை வாங்கிய விநியோகஸ்தர் தெரிவித்துள்ளார்.மேலும் இந்தியாவை சேர்க்காமல் மற்ற நாடுகளில் மட்டும் 65 கோடி என்று பேட்ட படக்குழுதெரிவித்துள்ளது.