irumbu thirai.jpeg

விவேகம் படத்திற்கு பிறகு நடிகர் அஜித் கறுப்பு முடியுடன் நிற்கும் படங்கள் சமீபகாலங்களில் வெளியாகி நிலையில் அவர் அடுத்து நடிக்கும் 'விஸ்வாசம்' படத்தில் நடிப்பதற்காகத்தான் டை அடித்து போஸ் கொடுத்தார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் நடித்துக்கொண்டிருக்கும் அஜித்துடன் படக்குழுவினர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களில் மீண்டும் அதே வெள்ளை முடி வெள்ளை தாடியுடன் நடித்து வருகிறார்.

Advertisment

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

Advertisment

இந்நிலையில் இதில் அஜித் நடிக்கும் கதாபாத்திரத்தை குறித்து தகவல் வெளியானது. அதன்படி அஜித் இப்படத்தில் இரண்டு கெட்-அப்புகளில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒன்று இளைஞராகவும், மற்றொன்று வயதான தோற்றத்திலும் வருகிறாராம். முதலில் வயதான தோற்றத்துக்கான படப்பிடிப்பு நடைபெறுகிறது. அதன் பிறகு இளமை தோற்றத்துக்கு அஜித் மாற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தாடியை முழுமையாக எடுத்து கருப்பு முடியுடன் இளமை தோற்றத்தில் அஜித் வருவார் என்றும் கூறப்படுகிறது. மேலும் சால்ட்-அண்ட் பெப்பர் லுக்கிலும் ஒரு சில காட்சிகளில் வருவாதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது மீண்டும் அஜித் நடன கலைஞர்கள் கூட வெள்ளை முடி கெட்டப்புடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளன. இதை கண்ட ரசிகர்கள் இதே போல் எப்போது அஜித்தின் இளமை கெட்டப் படம் வெளியாகும் என்று மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.