Advertisment

ரசிகர்களை கண்கலங்க வைத்த அஜித்!

ajith

விஸ்வாசம் படம் இன்று காலை ஒரு மணி அளவில் சென்னையில் சிறப்பு காட்சி போடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் இந்த படத்தின் இயக்குனர் சிவா, ஒளிப்பதிவாளர் வெற்றி, நடிகர் அருண் விஜய், அஜித் படத்தின் அடுத்த தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Advertisment

விவேகம் படம் கடந்த 2017 ஆகஸ்ட் மாதம் வெளியானதை அடுத்து, ஒன்றரை வருடம் கழித்து விஸ்வாசம் வெளியாகியுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் தியேட்டர்கள் முன்பு கோலாகலமாக திருவிழாவை போன்று கொண்டாடி வருகின்றனர். ரஜினியின் பேட்ட இப்படத்துடன் மோதுவதால் மேலும் எதிர்ப்பார்பை தூண்டியுள்ளது.

Advertisment

இந்நிலையில், காலை சிறப்பு காட்சியை பார்த்துவிட்டு வந்த அஜித் ரசிகர்கள். படம் மாஸாக இருப்பதை தாண்டி ஃபேமிலி செண்டிமெண்ட் படமாக இருக்கிறது. தல எங்களை அழவச்சிட்டாரு என்று கூறுகின்றனர்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe