விஸ்வரூபம் படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் ராகுல் போஸ். இவர் நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், சமூக ஆர்வலர் என்று பன்முக அடையாளம் கொண்டவர். அண்மையில் இவர் சந்தீகருக்கு ஒரு ஷூட்டிங்கிற்காக சென்றுள்ளார். அப்போது ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். அங்கு உடற்பயிற்சி முடிந்து வாழைப்பழம் வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால், வாழைப்பழத்துடன் வந்த பில் இவருக்கு மிகப்பெரிய ஷாக் கொடுத்துள்ளது.

Advertisment

rahul bose

இது குறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோவாகவே பதிவு செய்து வெளியிட்டுள்ளார் ராகுல் போஸ்.

Advertisment

அதில், "நான் சந்தீரில் ஒரு ஜேடபிள்யூ மாரியட் என்கிற ஹோட்டலில் தங்கியிருக்கிறேன். ஜிம்மில் பயிற்சி செய்து கொண்டிருந்த போது இரண்டு வாழைப்பழங்கள் கேட்டேன். எனக்குக் கொடுத்தார்கள். அதற்கான ரசீதைப் பாருங்கள்" என்று ரசீதைக் காட்டுகிறார். அதில் இரண்டு பழங்களுக்கான விலை, ஜிஎஸ்டியோடு சேர்த்து ரூ. 442.50 என்று போடப்பட்டுள்ளது. "இவற்றுக்கு நான் தகுதியானவனா தெரியவில்லை" என்று பேசியுள்ளார்.