
பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் கமலின் 'விஸ்வரூபம்2' படம் ஒரு வழியாக பல தடைகளை கடந்து சென்ற மே மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பட அதிபர்கள் நடத்திய ஸ்ட்ரைக் காரணமாக தள்ளிப்போனது. இதையடுத்து மீண்டும் எப்போது படம் வெளிவரும் என்று எதிர்ப்பார்ப்பு நிலவிய சமயத்தில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று தற்போது தகவல்கள் வெளியாகியிருக்கின்ற நிலையில் 'விஸ்வரூபம் 2' படத்தின் டிரைலர் வருகிற 11ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழில் வெளியாகும் ட்ரைலரை சுருதி ஹாசனும், இந்தி ட்ரைலரை அமீர் கானும், தெலுங்கு ட்ரைலரை ஜுனியர் என்.டி.ஆர்-ம் வெளியிடுகின்றனர். கமல் ஹாசன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் ஆன்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் முதல்பாகத்தை போல இப்படத்தையும் கமல்ஹாசனே இயக்கியுள்ளார்.