Skip to main content

முக்கிய கட்டத்தை தாண்டியது விஸ்வரூபம்-2!

Published on 17/03/2018 | Edited on 19/03/2018
viswaroop


ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி பட்டி தொட்டியெங்கும் பாடையை கிளப்பிய விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. கமல்ஹாசன், ஆண்ட்ரியா, பூஜாகுமார் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று முடிந்த நிலையில்  படத்தை தற்போது தணிக்கை குழுவிற்கு அனுப்பியுள்ளனர். படத்தை பார்த்த குழுவினர் ‘யூ/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதையடுத்து படத்தின் டிரெய்லரை ஸ்ட்ரைக் முடிந்ததும் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் படம் விரைவில்  வெளியாகும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

'விஸ்வரூபம்' நாயகி பூஜா குமாரின் முதல் படம் எது தெரியுமா..?

Published on 11/08/2018 | Edited on 11/08/2018
pooja kumar

 

 

 

'விஸ்வரூபம்' படத்தின் நாயகியாக அனைவருக்கும் பரிட்சயமானார் நடிகை பூஜா குமார். 'விஸ்வரூபம்' தான் இவரின் முதல் படம் என பெரும்பாலானவர்கள் நினைப்பதுண்டு. ஆனால் இவரின் முதல் படம் 'காதல் ரோஜாவே' ஆகும். கடந்த 2000ஆம் ஆண்டு பொங்கலன்று வெளியான இப்படத்தை பிரபல இயக்குனரும், முன்னாள் இயக்குனர் சங்க தலைவருமான கேயார் இயக்கியிருந்தார். நடிகர் ஜார்ஜ் நாயகனாக நடித்திருந்த இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். 1995ஆம் ஆண்டு அமெரிக்க வாழ் 'மிஸ் இந்தியா' அழகி பட்டம் வென்ற பூஜா குமார் முதலில் நடித்த 'காதல் ரோஜாவே' படம் சரியாக போகாத காரணத்தால் நீண்ட நாட்கள் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த அவர் கமலின் 'விஸ்வரூபம்' படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்தார்.

 

 

 

 

 

Next Story

விஸ்வரூபம் 2 புதிய படங்கள்