Skip to main content

விஸ்வரூபம் 2வில் வெட்டப்பட்ட காட்சிகள் 

Published on 09/08/2018 | Edited on 09/08/2018
viswaroopam 2

 

 

 

கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் ‘விஸ்வரூபம் 2’ படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி (நாளை) உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்  இப்படத்திற்கு சென்சார் போர்டு அளித்த கட், மியூட், காட்சி மாற்றம் ஆகியவற்றின் விவரங்கள் அடங்கிய பட்டியல் வெளியாகியுள்ளன. ஏற்கனவே தணிக்கையில் யூ/ஏ சான்றிதழ் பெற்றுள்ள இப்படத்தில் மொத்தம் 22 இடங்களில் தணிக்கை குழுவினர் கட், மியூட், காட்சி மாற்றங்கள் கொடுத்திருக்கிறார்கள். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் மூன்றாவது சிங்கிளின் பாடல் மற்றும் படத்தின் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'விஸ்வரூபம்' நாயகி பூஜா குமாரின் முதல் படம் எது தெரியுமா..?

Published on 11/08/2018 | Edited on 11/08/2018
pooja kumar

 

 

 

'விஸ்வரூபம்' படத்தின் நாயகியாக அனைவருக்கும் பரிட்சயமானார் நடிகை பூஜா குமார். 'விஸ்வரூபம்' தான் இவரின் முதல் படம் என பெரும்பாலானவர்கள் நினைப்பதுண்டு. ஆனால் இவரின் முதல் படம் 'காதல் ரோஜாவே' ஆகும். கடந்த 2000ஆம் ஆண்டு பொங்கலன்று வெளியான இப்படத்தை பிரபல இயக்குனரும், முன்னாள் இயக்குனர் சங்க தலைவருமான கேயார் இயக்கியிருந்தார். நடிகர் ஜார்ஜ் நாயகனாக நடித்திருந்த இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். 1995ஆம் ஆண்டு அமெரிக்க வாழ் 'மிஸ் இந்தியா' அழகி பட்டம் வென்ற பூஜா குமார் முதலில் நடித்த 'காதல் ரோஜாவே' படம் சரியாக போகாத காரணத்தால் நீண்ட நாட்கள் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த அவர் கமலின் 'விஸ்வரூபம்' படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்தார்.

 

 

 

 

 

Next Story

விஸ்வரூபம் 2 புதிய படங்கள்