viswaroopam 2

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் ‘விஸ்வரூபம் 2’ படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி (நாளை) உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்திற்கு சென்சார் போர்டு அளித்த கட், மியூட், காட்சி மாற்றம் ஆகியவற்றின் விவரங்கள் அடங்கிய பட்டியல் வெளியாகியுள்ளன. ஏற்கனவே தணிக்கையில் யூ/ஏ சான்றிதழ் பெற்றுள்ள இப்படத்தில் மொத்தம் 22 இடங்களில் தணிக்கை குழுவினர் கட், மியூட், காட்சி மாற்றங்கள் கொடுத்திருக்கிறார்கள். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் மூன்றாவது சிங்கிளின் பாடல் மற்றும் படத்தின் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">