visvak sen movie first look released

தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 'ஃபலக்னுமா தாஸ்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விஷ்வக் சென். இவர் தற்போது கதாநாயகனாக ஒரு படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 'தாஸ் கா தம்கி' என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisment

இப்படத்தில் ராவ் ரமேஷ், ஹைப்பர் ஆதி, ரோகிணி, பிரித்விராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தினேஷ் கே. பாபு ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார்.ரொமாண்டிக் வித் ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகி வரும் இந்த திரைப்படத்தை வன்மயே கிரியேசன்ஸ் மற்றும் விஷ்வக் சென் சினிமாஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கராத்தே ராஜு மற்றும் நடிகர் விஷ்வக் சென் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

Advertisment

'தாஸ் கா தம்கி' திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.