/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/120_21.jpg)
எம்.பத்மகுமார் இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ், ஆத்மியா ராஜன், மாளவிகா, திலேஷ் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படம் ஜோசப். இப்படத்திற்கு கேரளாவில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைக்க, படம் மாபெரும் வெற்றிபெற்றது. மலையாளத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, ஜோசப் திரைப்படம் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இப்படத்திற்கு தமிழில் 'விசித்திரன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
தமிழ் ரீமேக்கை இயக்குநர் பாலா தயாரிக்க, ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடித்துள்ளார். மலையாளத்தில் இயக்கிய எம்.பத்மகுமாரே தமிழிலும் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்காக ஆர்.கே.சுரேஷ் தன்னுடைய உடல் எடையை 73 கிலோவில் இருந்து 95 கிலோவிற்கு அதிகரித்துநடித்துள்ளார். இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டே வெளியான நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, விசித்திரம் படம் வரும் மே 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)