“Visited Uzbekistan twice; It is possible because of him” - Trisha

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்குப் பிறகு திரிஷாவின் சினிமா கிராஃப்மீண்டும் உயரத் தொடங்கியிருக்கிறது. அந்த வகையில், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தந்து வெளியாக இருக்கிற ராங்கி திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது.இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நடிகை திரிஷா பேசியதாவது...

Advertisment

“கதாநாயகியை மையமிட்ட திரைப்படத்தில் எந்த விதமான தடைகளும், கட்டுப்பாடுகளும் இல்லாமல் இந்தப் படத்தைத்தயாரித்தது தயாரிப்பாளர் சுபாஷ்கரன்.அவர்களால் தான் இந்த படத்திற்குஉஸ்பெகிஸ்தான் நாட்டில் போய் படப்பிடிப்பு நடத்தமுடிந்தது. முதல் முறை சென்று திரும்பி வந்த பிறகும், இரண்டாவது முறையும் அங்கே போய் படப்பிடிப்பு நடத்தினோம்.

Advertisment

இயக்குநர் இன்னொரு முறை சில பாகங்களைப்படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டதும், அதை சாத்தியப்படுத்தியது தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தான். அவர் இல்லாவிட்டால் இது சாத்தியமாகியிருக்காது. இந்தப் படத்திற்கு முழு காரணம் அவர் தான். இரண்டு வருடம் கொரோனா கால ஊரடங்கு முடியும் வரை காத்திருந்து படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம்.இப்போதுதான் கொஞ்சம் ஓய்வாக உணர்கிறேன்.” என்று பேசினார்.