Advertisment

அதர்வா தம்பியை இயக்கும் அஜித் பட இயக்குநர்?

vishnu varthan

மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ், கடந்த வருட இறுதியில் 'மாஸ்டர்' படத் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் மகள் சினேகா பிரிட்டோவைதிருமணம் செய்துகொண்டார். இவர், தற்போது சினிமாவில் கதாநாயகனாக நடிக்கும் முயற்சியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இதற்காக பல இயக்குநர்களிடம் கதை கேட்டு வந்த நிலையில், இயக்குநர் விஷ்ணு வர்தன் கூறிய கதை பிடித்துப்போக, அதில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். விஷ்ணு வர்தன் நடிகர் அஜித்தை வைத்து ‘பில்லா’, ‘ஆரம்பம்’ ஆகிய படங்களை இயக்கியவர் ஆவார். இந்தியில் விஷ்ணு வர்தன் இயக்கி வந்த'ஷெர்ஷா' படத்தின் பணிகள் நிறைவு பெற்று ரிலீசிற்குத் தயாராகி வருவதால், ஆகாஷ் நடிக்கும் படத்தின் பணிகளை விரைவில் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

இப்படத்தை சேவியர் பிரிட்டோவின் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.

vishnu varathan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe