vishnuvardhan about nesippaya movie

இயக்குநர் விஷ்ணுவர்தன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் இயக்கியுள்ள படம் நேசிப்பாயா. இந்தப் படத்தில் மறைந்த நடிகர் முரளியின் மகனும் நடிகர் அதர்வாவின் சகோதரருமான ஆகாஷ் முரளி ஹீரோவாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படம் குறித்து விஷ்ணுவர்தன் பேசுகையில், “இது ஒரு காதல் கதை. ஆனால் ட்ராமா கொஞ்சம் அதிகமாக இருக்கும். இதற்கு முன்னாடி ஏகப்பட்ட காதல் படங்கள் வந்திருக்கிறது. ஆனால் இந்தப் படம் இந்த காலத்து இளைஞர்களுக்கு ஏற்றது போல் இருக்கும். 5 வருடங்களுக்கு முன்பு காதல் என்பது வேறொன்றாக இருந்தது. இந்த தலைமுறையினர் எதாவது பிடிக்கவில்லை என்றால் உடனே யோசிக்காமல் பிரிந்து சென்றுவிடுகிறார்கள். தொடர்ந்து அடுத்தடுத்து பயணிக்கிறார்கள். ஆனால் காதலில் பிரிந்து சென்ற பிறகுதான் தவறுகள் உணரப்படும். அதன் பிறகு எப்படி காதலுக்கு திரும்ப போவது என்பதை இந்தப் படம் பேசும்” என்றார்.