Vishnuvaradhan teamed up with master film producer

பட்டியல், பில்லா, ஆரம்பம் என ஹிட் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் விஷ்ணுவர்தன். இவர் கடந்த 2021ஆம் ஆண்டில் இந்தியில் 'ஷெர்ஷா’ படத்தை இயக்கியிருந்தார். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், இப்படத்தின் மூலம் இயக்குநர் விஷ்ணுவர்தனுக்கு தேசிய விருது கிடைத்தது.

Advertisment

இதற்கிடையில், தமிழில் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளியை ஹீரோவாக வைத்து ஒரு படம் இயக்கி வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டது. இதில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிப்பதாகவும், படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.

Advertisment

இந்த நிலையில், அந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. மாஸ்டர் படத்தை தயாரித்த XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இப்படத்திற்கு ‘நேசிப்பாயா’ என தலைப்பு வைத்துள்ளனர். இது குறித்து XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில், டைட்டில் ரிவிலீங் வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில், விதியால் சவால் செய்யப்பட காதல் பயணம் என்று குறிப்பிட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த படம் விரைவில் திரையரங்களில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.