ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், பிரபு சாலமன்இயக்கத்தில், ராணாவுடன் விஷ்ணு விஷால் இணைந்து நடித்தகாடன்படம் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக முடியாமல் தள்ளிப்போனது.
/>
விஷ்ணு விஷால்நடிப்பில் உருவாகியுள்ள 'எஃப்.ஐ.ஆர்.', 'இன்று நேற்று நாளை 2' உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து தயாராகி வருகிறது. இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், ''என்னுடைய புதிய படத்தை ஏப்ரல் 11 அன்று தொடங்குவதாக இருந்தது. ஆனால் வாழ்க்கை வேறு திட்டங்களை வைத்திருக்கிறது. அதே தினத்தில் நேர்மறை எண்ணத்துடன் சில தகவல்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
ஆனால் அது உங்களது அனுமதி இருந்தால் மட்டுமே. வித்தியாசமான முயற்சியாக டைட்டில் அறிவிப்பு டீஸரை வெளியிடவிருக்கிறோம். ஆனால் உங்களின் முடிவே இறுதியானது'' என்று ரசிகர்களிடம் கேட்டிருக்கிறார். அதற்கு பெரும்பாலான ரசிகர்கள் வெளியிடுங்கள் என பதிலளித்துள்ளனர். இதனையடுத்து நேற்றிரவு அவரது ட்விட்டரில் என்னுடைய அடுத்த படத்தின் டைட்டில் டீஸர் (11-04-20) நாளை மாலை 4:30 மணிக்கு வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் விஷ்ணு விஷாலின் அடுத்த படத்தின்பெயர் என்ன என்பதுகுறித்துடைட்டில் டீஸர்வெளியாகியுள்ளது. அதில் அந்த படத்திற்குமோஹன்தாஸ் என்று பெயரிட்டுள்ளது படக்குழு.