Skip to main content

'இந்த நிலைமைக்கெல்லாம் விஷால் காரணமல்ல' - விஷ்ணு விஷால் விரக்தி

Published on 08/12/2018 | Edited on 08/12/2018
vv

 

ராட்சசன் படத்தை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் சிலுக்குவார்பட்டி சிங்கம் படம் வரும் டிசம்பர் 21ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கிடையே அதே தேதியில் அடங்க மறு, சீதக்காதி ஆகிய படங்கள் வெளியாவதாக தயாரிப்பாளர் சங்கம் ஒழுங்குபடுத்துதல் கமிட்டி உறுதிப்படுத்தியது. இதைத்தொடர்ந்து மாரி 2, மற்றும் கனா ஆகிய படங்களும் இப்போட்டியில் இணைந்தன. இதனால் மற்ற படங்களின் தயாரிப்பாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்த நிலையில் தொடர்ச்சியாகக் குழப்பம் நீடித்ததால் டிசம்பர் 21ஆம் தேதி யார் வேண்டுமானாலும் படத்தை வெளியிட்டுக் கொள்ளலாம் என்று தயாரிப்பாளர் சங்கம் அதிரடியாக அறிவித்து பிரச்சனையில் இருந்து விலகிக் கொண்டது. இந்நிலையில் இந்த அறிவிப்பால் கடும் கோபமடைந்த விஷ்ணு விஷால் ட்விட்டரில் தயாரிப்பாளர் சங்கத்தை கடுமையாக சாடியுள்ளார். அதில்...

 

 

"விதிமுறைகள்... விதிகள் இன்மை... விதிமுறைகளை சரியாக கடைப்பிடிப்பவர்களுக்கு இப்படித்தான் நீதி வழங்கப்படுமா? இது முதன்முறையல்ல. இரண்டாவது முறையாக இது எனக்கு நடக்கிறது. அப்புறம் எதற்கு விதிகள்? சிஸ்டம் தோற்றுவிட்டது. உள்குத்து அரசியல் இருக்கட்டும், வெளிப்படையான அறிக்கை என்றால் என்னவென்று பிறருக்குத் தெரிவிக்கவே இதை சொல்கிறேன். 

 

டிசம்பர் 21ல் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்‘ வெளியாகிறது. கடந்த ஒரு மாதத்தில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் கவுன்சிலின் அனைத்துக் கூட்டங்களிலும் கலந்து கொண்ட வகையில் சொல்கிறேன். இத்தகைய நிலைமைக்கெல்லாம் நிச்சயமாக விஷால் காரணமல்ல. நான் ஏற்கனவே சொன்னதுபோல் எல்லாம் உள்குத்து அரசியல். விதிமுறைகள் எல்லாம் அதைப் பின்பற்றுபவர்களுக்கு மட்டுமே" என காட்டமாக பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்