Advertisment

பிரபல தெலுங்கு நடிகருடன் இணைந்த விஷ்ணு விஷால் - கவனம் ஈர்க்கும் மோஷன் போஸ்டர்

Vishnu Vishal teamed up with famous Telugu actor - Attractive Motion Poster

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் நடிகர் 'விஷ்ணு விஷால்'. 'இன்று நேற்று நாளை', 'ராட்சசன்' படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். 'எஃப்.ஐ.ஆர்' பட வெற்றிக்கு பிறகு முரளி கார்த்திக் இயக்கத்தில் 'மோகன்தாஸ்' படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisment

இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் 'ரவி தேஜா' தயாரிக்கும் 'கட்டா குஸ்தி' படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். செல்லா அய்யாவு இயக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். தற்போது இப்படத்தினுடைய டைட்டில் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். குத்து சண்டை விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தயாராகி வருகிறது. ரவி தேஜா நிறுவனத்தோடு இணைந்து விஷ்ணு விஷாலும் இப்படத்தை தயாரிக்கிறார்.

Advertisment

ravi teja actor vishnu vishal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe