Advertisment

"அடிப்படையில் நான் விளையாட்டுத் துறையில் இருந்து வந்தவன்" - விஷ்ணு விஷால்

vishnu vishal start his fans club update

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வளர்ந்து வரும் விஷ்ணு விஷால், 'லால் சலாம்', 'மோகன்தாஸ்', 'ஆர்யன்' உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார். நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய அவர், ஒரு புது செய்தியை வெளியிட்டிருந்தார்.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="a6b916ae-9d54-4682-a936-9c64f1ed085d" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500x300-Website%20%281%29_6.jpg" />

Advertisment

அந்த செய்தியில், "என்மீது அன்பு கொண்ட தம்பிகள் பலர், எனது திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் சமயங்களிலும், எனது பிறந்தநாளிலும் மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நற்பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள். அந்த நற்பணிகளுக்கு ஒரு அங்கீகாரம் வழங்கவேண்டும் என்ற நோக்கத்தில் ‘விஷ்ணு விஷால் நற்பணி மன்றம்’ என்ற அமைப்பை தொடங்கி இருக்கிறோம். இனி எனது ரசிகர்களின் செயல்பாடுகள் அனைத்தும் இம்மன்றம் மூலமாக ஒருங்கிணைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அடிப்படையில் நான் விளையாட்டுத் துறையில் இருந்து வந்தவன் என்ற முறையில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு உதவிகளை தொடர்ந்து செய்துவருகிறோம். இதில், ஹேமமாலினி ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கத்தையும், திவ்யா தடைதாண்டும் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தையும், ஸ்டாலின் ஜோஸ் டெக்கத்லானில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்று சாதனை படைத்துள்ளனர். இந்த முயற்சியை மேலும் பெரிதாக்கி; விளையாட்டு வீரர்களுக்கு உதவும் வகையில் ஒரு செயல் திட்டத்தைத் தீட்டிவருகிறோம். அந்தத் திட்டம் பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிட இருக்கிறோம், என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

actor vishnu vishal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe