Advertisment

"உதயநிதி ஸ்டாலின் அண்ணாவுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது" - நடிகர் விஷ்ணு விஷால் பேச்சு 

Vishnu Vishal

Advertisment

மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான், கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள எஃப்.ஐ.ஆர். திரைப்படம், பிப்ரவரி 11 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படக்குழு இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தது.

அந்த நிகழ்வில் நடிகர் விஷ்ணு விஷால் பேசுகையில், "ராட்சசன் படத்திற்கு பிறகு தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் எனக்கு மிகப்பெரிய புகழ் கிடைத்தது. நான் எங்கு சென்றாலும் அந்தப் படத்தை பற்றியே பேசினார்கள். என்னை ஒரு நடிகனாக மதிக்க ஆரம்பித்தார்கள். இனி நடிக்கும் படங்களில் மிகவும் கவனமாக நடிக்க வேண்டும் என்று எனக்குப் புரிதல் கிடைத்தது. ராட்சசன் படத்திற்கு பிறகு வெளியான படங்கள் அனைத்தும் முன்பே நான் நடித்த படங்கள். ராட்சசன் படத்திற்கு பிறகு நான் நடித்த படங்களில் முதலில் வெளியாவது எஃப்.ஐ.ஆர்.தான்.

இயக்குநர் மனு முதலில் ஒரு கதை கூறினார். அந்தக் கதை எனக்கு பிடித்திருந்தது. இருந்தாலும் வேறு கதை இருக்கிறதா என்று கேட்டேன். அப்போது அவர் கூறிய கதைதான் எஃப்.ஐ.ஆர். படத்தை முதலில் வேறு ஒரு தயாரிப்பாளர் தயாரிப்பதாக இருந்தது. படத்தை இதற்கு மேல் அவரால் தொடர முடியாது என்ற நிலை வந்தவுடன், சார் நீங்க இந்தப் படத்திற்காக டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம்... வேறு படத்துல நடிங்க என்று மனு என்னிடம் கூறினார். ஒரு அறிமுக இயக்குநர் எப்போதும் எப்படியாவது படம் இயக்க வேண்டும் என்றுதான் நினைப்பார். ஆனால், மனு நேர்மையாக இப்படி பேசியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவரது உண்மை பிடித்திருந்த காரணத்தால்தான் இந்தப் படத்தை தயாரிக்கவும் முடிவு செய்தேன். தனுஷ் சார் படம் பார்த்துவிட்டு ராட்சசன் விஷ்ணு விஷாலுக்கும் எஃப்.ஐ.ஆர். விஷ்ணு விஷாலுக்கும் இடையே ஒரு நடிகராக மிகப்பெரிய வித்தியாசம் பார்க்கிறேன் எனப் பாராட்டினார்.

Advertisment

உதயநிதி ஸ்டாலின் அண்ணன் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருக்கிறார். இப்ப மட்டுமல்ல, குள்ளநரி கூட்டம் படத்தையே அவரது நிறுவனம் தான் ரிலீஸ் பண்ணிக் கொடுத்தாங்க. அங்க இருந்துதான் என்னுடைய வாழ்க்கையே மொத்தமாக மாறியது. இதற்காக உதய் அண்ணாவிற்கும் மூர்த்தி சாருக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது" எனக் கூறினார்.

actor vishnu vishal FIR movie
இதையும் படியுங்கள்
Subscribe