''அது என்னுடைய தனிப்பட்ட விஷயம்'' - விஷ்ணு விஷால் காட்டம்!

நடிகர் விஷ்ணு விஷாலுக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு விவாகரத்து ஆனது. இதையடுத்து அவருக்கு பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் பழக்கம் ஏற்பட்டு, இவர்கள் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. மேலும் விஷ்ணு விஷால் மனைவி ரஜினியைப் பிரிந்ததிற்கு ஜுவாலா கட்டாவுடன் ஏற்பட்ட பழக்கம் தான் காரணம் என்று செய்திகள் வெளியான நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷால். அதில்...

bcb

"ஜுவாலா கட்டாவினால் நான் என் மனைவியைப் பிரிந்து விட்டேன் என்று சிலர் சொல்கிறார்கள். இன்னும் சிலர் ராட்சசன் படநேரத்தில் நான் அமலா பாலோடு இருந்ததாகச் சொல்கின்றனர். அவர்கள் கூறுவது பொய் என நிரூபிக்க என்னுடைய பிரிவின் உண்மையான காரணத்தை என்னால் கூற இயலாது. அது என்னுடைய தனிப்பட்ட விஷயம்" என விளக்கம் அளித்துள்ளார்.

vishnu vishal
இதையும் படியுங்கள்
Subscribe