/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/EupXeunUYAMX71W.jpg)
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'காடன்', 'ஜகஜால கில்லாடி', 'எஃப்.ஐ.ஆர்' ஆகிய படங்களின் பணிகள் நிறைவுற்று ரிலீசிற்குத் தயாராகவுள்ளன. இப்படங்களைத் தொடர்ந்து, விஷ்ணு விஷால் நடிக்கவிருக்கும் படம் 'மோகன்தாஸ்'. இப்படத்தை 'களவு' படத்தை இயக்கிய முரளி கார்த்திக் இயக்க, நடிகர் விஷ்ணு விஷாலே தயாரிக்கிறார். விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.
சமீபத்தில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட 'மோகன்தாஸ்' படக்குழு, படத்தின் முதற்கட்டப் பணிகளில் கவனம் செலுத்திவருகிறது. இந்த நிலையில், பிரபல மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் இப்படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இவர், கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நரகாசூரன்' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படத்திற்கான முதற்கட்டப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதையடுத்து, விரைவில் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)