Advertisment

குஸ்திக்கு தயாரான விஷ்ணு விஷால் - வைரலாகும் வீடியோ

vishnu vishal 'mohandas' and 'Gatta Kusthi' movies glimpse video viral on internet

தமிழ் சினிமாவில் 'இன்று நேற்று நாளை', 'ராட்சசன்' என வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விஷ்ணு விஷால். அந்த வகையில் முரளி கார்த்திக் இயக்கும் 'மோகன்தாஸ்' படத்தில் நடித்துமுடித்துள்ள விஷ்ணு விஷால் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா தயாரிக்கும் 'கட்டா குஸ்தி' படத்தில் நடித்து வருகிறார். இதில் 'மோகன்தாஸ்' படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. பின்பு சமீபத்தில் வெளியான 'கட்டா குஸ்தி' படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் பலரது கவனத்தை ஈர்த்தது.

Advertisment

இதனிடையே 'மோகன்தாஸ்' மற்றும் 'கட்டா குஸ்தி' படத்தின் கிளிம்ப்ஸ் காட்சி நேற்று(18.07.2022) விஷ்ணு விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இதில் 'மோகன்தாஸ்' கிளிம்ப்ஸ் காட்சியில் விஷ்ணு விஷால் கதாபாத்திரம் தனக்கு தானே பிறந்தநாள் வாழ்த்து சொல்கிறார். இந்த வீடியோ பலரது கவனத்தை பெற்று யூ-ட்யூபில் அதிக பார்வையாளர்களை கடந்து தற்போது வைரலாகி வருகிறது. பிறகு குத்து சண்டை விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வெளியாகியுள்ள 'கட்டா குஸ்தி' படத்தின் கிளிம்ப்ஸ் காட்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் 'வீரா' என்ற கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ளார்.

Advertisment

actor vishnu vishal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe