கடந்த 2012ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற 'கும்கி' படத்தின் இரண்டாம் பாகமான 'கும்கி 2' தற்போது விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய பிரபு சாலமனே இப்படத்தையும் இயக்குகிறார். இதற்கிடையே கடந்து ஆண்டே இப்படத்தின் நாயகன் சம்பந்தப்பட்ட சிறு வயது ப்ளாஷ்பேக் காட்சிகள் தாய்லாந்தில் படமாக்கப்பட்டதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது படத்தின் நாயகனாக விஷ்ணு விஷால் நடிப்பதாக மற்றுமொறு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதன் காரணமாக கேரளாவில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் விஷ்ணுவும் கலந்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கும்கி 2 வில் இவர் தான் கதாநாயகன்...?
Advertisment