
'வெண்ணிலா கபடிக்குழு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான விஷ்ணு விஷால், அதனைத் தொடர்ந்து பல வித்தியாசமான, கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலான படங்களில் நடித்து பல வெற்றிகளை கொடுத்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் உருவான 'காடன்' படத்துக்கான பத்திரிகையாளர் சந்திப்பில், விரைவில் ஜுவாலா கட்டாவைத் திருமணம் செய்யவிருப்பதாக விஷ்ணு விஷால் தெரிவித்தார். விஷ்ணு விஷால் ஏற்கனவே ரஜினி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆர்யன் என்றொரு குழந்தையும் உண்டு. கடந்த வருடம் இருவருக்கும் விவாகரத்தானது. இதனைத் தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வந்த விஷ்ணு விஷால், இந்திய பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை நீண்ட நாட்களாகக் காதலித்து வந்தார்.

சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் இவர்களுக்கு எளிமையாக நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிலையில் விஷ்ணு விஷால் வரும் ஏப்ரல் 22-ம் தேதி அன்று தங்களுக்கு திருமணம் நடைபெறும் என்று சமீபத்தில் அறிவித்தார். அதன்படி நடிகர் விஷ்ணு விஷால் ஜுவாலா கட்டாவை இன்று திருமணம் செய்துகொண்டார். இவ்ரகள் திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இவர்கள் இருவருக்கும் திரைத்துறை சார்ந்தவர்களும், ரசிகர்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்துப் பெற்றவர்என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)