சர்ச்சைக்கு விளக்கமளித்த விஷ்ணு விஷால்

vishnu vishal explained about super star issue

லால் சலாம், மோகன்தாஸ், ஆர்யன்உள்ளிட்ட படங்களைவிஷ்ணு விஷால்கைவசம் வைத்துள்ளார். மேலும் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார். இதில் லால் சலாம் படத்தைஐஸ்வர்யாரஜினிகாந்த் இயக்கி வரும் நிலையில், ரஜினி சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற பொங்கலைமுன்னிட்டு வெளியாகவுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு விஷ்ணு விஷால், தனது எக்ஸ் தள பக்கத்தில் கமல் மற்றும் ஆமிர் கானுடன் எடுத்த புகைப்படத்தைப்பகிர்ந்திருந்தார். அந்தப் பதிவில் “சூப்பர் ஸ்டார்கள் எப்போதும் சூப்பர் ஸ்டார்கள்” எனப் பதிவிட்டிருந்தார். சூப்பர் ஸ்டார் என அவர் பதிவிட்டிருந்தது சர்ச்சையானது. பின்பு“ஸ்டார்கள் எப்போதும் ஸ்டார்கள்” என எடிட் செய்தார்.

இந்த நிலையில் இந்த சர்ச்சை குறித்து தற்போது விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சூப்பர் ஸ்டார்கள் எல்லாம் சூப்பர் ஸ்டார்கள்தான். எனது பதிவை நான் எடிட் செய்ததால், நான் பலவீனமாகவில்லை. சூப்பர் ஸ்டாராக இருக்கும் அனைவரையும் நான் விரும்புகிறேன். எனவே நீங்கள் அனைவரும் என்னை பற்றிநெகடிவிட்டியை பரப்ப முயல்கிறீர்கள். நமக்கு ஒரே ஒரு சூப்பர்ஸ்டார் பட்டம்தான் இருக்கும். ஆனால் சூப்பர் ஸ்டார்கள் என்பது என் மரியாதைக்கு அப்பாற்பட்டு சாதனை படைத்தவர்கள். எனவே அன்பை பரப்புவோம், வெறுப்பை அல்ல” எனக் குறிப்பிட்டுள்ளார்.

actor vishnu vishal
இதையும் படியுங்கள்
Subscribe