உலகமே கொரோனா வைரஸால் ஸ்தம்பித்து போய் உள்ள நிலையில் இந்தியாவில் இதன் காரணமாக 21 நாட்கள் 144 தடை உத்தரவு தற்போது அமலில் இருந்து வருகிறது. இதனால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

Advertisment

vv

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

அதேபோல் திரை உலகினரும் படப்பிடிப்புகள் எதுவும் இல்லாததால் நாட்கணக்கில் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளன நிலையில் பிரபல பேட்மிண்டன் வீராங்கனையும், விஷ்ணு விஷால் காதலியுமான ஜூவாலா கட்டா டிவிட்டரில் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களைப் பதிவிட்டு...'மிஸ்ஸிங் மை பூ' எனக் குறிப்பிட்டு விஷ்ணுவிஷாலை மிஸ் செய்வதாகப் பதிவிட்டிருந்தார். பின்னர் இதற்கு பதிலளித்த நடிகர் விஷ்ணு விஷால்...'அது பரவாயில்லை. ஆனால் தற்போது சமூக இடைவெளி மிகவும் முக்கியம். அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்து கொள்வோம்' எனப் பதிவிட்டு காதலிக்கு ஆறுதல் சொன்னது மட்டுமின்றி விழிப்புணர்வும் ஏற்படுத்தியுள்ளார்.