/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/viii.jpg)
கடந்த 2012ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற 'கும்கி' படத்தின் இரண்டாம் பாகமான 'கும்கி 2' தற்போது விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய பிரபு சாலமனே இப்படத்தையும் இயக்குகிறார். இந்நிலையில் இப்படத்தின் நாயகனாக விஷ்ணு விஷால் நடிப்பதாக நேற்று தகவல் வெளியானது. மேலும் கேரளாவில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் விஷ்ணு கலந்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியிருந்த நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் இப்படத்தில் நடிப்பதாக வந்த தகவலை மறுத்துள்ளார். மேலும் இது குறித்த விளக்கத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்.... " 'ஹாதி மெரே சாதி' ஹிந்தி படத்தின் தழுவலாக உருவாகும் தமிழ், தெலுங்கு பதிப்பில் இயக்குனர் பிரபு சாலமன் மற்றும் ராணா டகுபதி உடனும் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. இது எனது முதல் நேரடி தெலுங்கு படம். 26 நாட்கள் நடந்த முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது மூணாரில் நிறைவடைந்துள்ளது. இது 'கும்கி 2' படம் இல்லை. அதே சமயம் இது ரீமேக் படமும் இல்லை. படத்தில் டைட்டில் விரைவில் வரும்" என பதிவிட்டு விளமளித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)