ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பிரபு சாலமன்இயக்கத்தில் நடிகர் ராணாவுடன் விஷ்ணு விஷால் இணைந்து நடித்த 'காடன்' படம் ஏப்ரல் 2-ஆம் தேதி வெளியாக முடியாமல் தள்ளிப்போனது.

Advertisment

vishnu vishal

விஷ்ணு விஷால்நடிப்பில் உருவாகியுள்ள 'எஃப்ஐஆர்', 'இன்று நேற்று நாளை 2' உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து தயாராகி வருகிறது. இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், ''என்னுடைய புதிய படத்தை ஏப்ரல் 11 அன்று தொடங்குவதாக இருந்தது. ஆனால் வாழ்க்கை வேறு திட்டங்களை வைத்திருக்கிறது. அதே தினத்தில் நேர்மறை எண்ணத்துடன் சில தகவல்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஆனால் அது உங்களது அனுமதி இருந்தால் மட்டுமே. வித்தியாசமான முயற்சியாக டைட்டில் அறிவிப்பு டீஸரை வெளியிடவிருக்கிறோம். ஆனால் உங்களின் முடிவே இறுதியானது'' என்று கருத்துக்கணிப்பு(POLL) வைத்துரசிகர்களிடம் கேட்டிருக்கிறார். அதற்கு பெரும்பாலான ரசிகர்கள் வெளியிடுங்கள் எனப் பதிலளித்துள்ளனர்.