Advertisment

திருமண தேதியை அறிவித்த விஷ்ணு விஷால்!

vishnu vishal

நடிகர் விஷ்ணு விஷாலுக்கும் நடிகர் நட்ராஜின் மகள் ரஜினி நட்ராஜிற்கும் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இத்தம்பதி 2018ஆம் ஆண்டு விவாகரத்து செய்தனர்.

Advertisment

அதன் பிறகு, பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலிப்பதாக நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்தார். கடந்த ஆண்டின் தொடக்கத்தில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிலையில், தன்னுடைய திருமண தேதியை நடிகர் விஷ்ணு விஷால் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி, விஷ்ணு விஷால் மற்றும் ஜுவாலா கட்டா திருமணம் ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற உள்ளது.

Advertisment

திருமண அழைப்பிதழை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஷ்ணு விஷால், “எப்போதும்போல உங்களின் அன்பும் ஆதரவும் தேவை" எனக் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து, விஷ்ணு விஷாலுக்கு பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

actor vishnu vishal
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe