Skip to main content

திருமண தேதியை அறிவித்த விஷ்ணு விஷால்!

Published on 13/04/2021 | Edited on 13/04/2021

 

vishnu vishal

 

நடிகர் விஷ்ணு விஷாலுக்கும் நடிகர் நட்ராஜின் மகள் ரஜினி நட்ராஜிற்கும் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இத்தம்பதி 2018ஆம் ஆண்டு விவாகரத்து செய்தனர்.

 

அதன் பிறகு, பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலிப்பதாக நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்தார். கடந்த ஆண்டின் தொடக்கத்தில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிலையில், தன்னுடைய திருமண தேதியை நடிகர் விஷ்ணு விஷால் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி, விஷ்ணு விஷால் மற்றும் ஜுவாலா கட்டா திருமணம் ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. 

 

திருமண அழைப்பிதழை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஷ்ணு விஷால், “எப்போதும் போல உங்களின் அன்பும் ஆதரவும் தேவை" எனக் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து, விஷ்ணு விஷாலுக்கு பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் விஷ்ணு விஷால்

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
vishnu vishal new movie with arunraja kamaraj

லால் சலாம், மோகன்தாஸ், ஆர்யன் உள்ளிட்ட படங்களை விஷ்ணு விஷால் கைவசம் வைத்துள்ளார். மேலும் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார். இதில் லால் சலாம் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் நிலையில், ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இதனைத் தொடர்ந்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா உள்ளிட்ட சில படங்களை இயக்கிய கோகுல் இயக்கத்தில் ஒரு படமும், கட்டா குஸ்தி பட இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் ஒரு படமும் தயாரித்து நடிக்கவுள்ளார். 

இந்த நிலையில், தற்போது விஷ்ணு விஷால் நடிக்கும் புது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இப்படத்தை தயாரிக்கிறார். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தினை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் தலைப்பு, படத்தில் பணியாற்றவுள்ள நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Next Story

மீண்டும் இணைந்த வெற்றிக் கூட்டணி

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
vishnu vishal once again joined with gatta kusthi movie director

லால் சலாம், மோகன்தாஸ், ஆர்யன் உள்ளிட்ட படங்களை விஷ்ணு விஷால் கைவசம் வைத்துள்ளார். மேலும் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார். இதில் லால் சலாம் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் நிலையில், ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இதனைத் தொடர்ந்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா உள்ளிட்ட சில படங்களை இயக்கிய கோகுல் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதனை விஷ்ணு விஷாலே அவரது தயாரிப்பு நிறுவனமான விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் சார்பாக தயாரிக்கிறார். 

இந்த நிலையில் தற்போது அடுத்த படத்திற்கான அறிவிப்பை அறிவித்துள்ளார். கட்டா குஸ்தி பட இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தை விஷ்ணு விஷாலே தயாரிக்கிறார். இது குறித்து பேசிய விஷ்ணு விஷால், “கட்டா குஸ்தி படத்திற்கு நீங்கள் கொடுத்த அன்பு தான் எங்களை மீண்டும் இணைய வைத்துள்ளது. விரைவில் அடுத்தடுத்த அப்டேட் வரும்” என அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.