Advertisment

வா... இது நம் வாழ்வின் புதிய தொடக்கம்! -நள்ளிரவில் காதலை அறிவித்த விஷ்ணு விஷால்..

vishnu vishal

வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான விஷ்ணு விஷால், அதனை தொடர்ந்து பல வித்தியாசமான, கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலான படங்களில் நடித்து பல வெற்றிகளை கொடுத்துள்ளார்.

Advertisment

கரோனா அச்சுறுத்தலால் இவர் நடிப்பில் உருவான காடன் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீண்டும் திரையரங்கம் திறந்தவுடன் படத்தை ரிலீஸ் செய்துவிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

ரஜினி என்பவரை திருமணம் செய்துகொண்ட விஷ்ணு விஷாலுக்கு ஆர்யன் என்றொரு குழந்தையும் உண்டு. கடந்த வருடம் இருவருக்கும் விவாகரத்தானது. இதனை தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வந்த விஷ்ணு விஷால், இந்திய பேட்மிட்டன் பிளேயர் ஜாவ்லா குட்டாவை காதலித்து வந்தார்.

இந்நிலையில்ஜாவ்லா குட்டாவின் பிறந்தநாளான இன்று, இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்க்கையை தொடர திட்டமிட்டிருப்பதாக தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். இதற்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

vishnu vishal
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe