Advertisment

"நம்பிக்கைத் துரோகம் செய்தவர் யார் என்பது விரைவில் வெளிவரும்" சூரி விவகாரத்தில் விஷ்ணு விஷால் பதிவு!

vishnu vishal

தமிழ்த் திரைப்பட நடிகர் விஷ்ணு விஷாலும், நகைச்சுவை நடிகர் சூரியும் நெருங்கிய நண்பர்கள். சமீபத்தில் கிளம்பிய நில மோசடி தொடர்பான சர்ச்சை இருவரது உறவையும் பாதித்துள்ளது. நிலம் வாங்கித் தருவதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாக விஷ்ணு விஷாலின் தந்தையும் முன்னாள் டி.ஜி.பி ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் ஆகியோர் மீது நடிகர் சூரி வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கின் மீதான விசாரணையானது தற்போது நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்த நிலையில், சமீபத்தில் எடுத்த தன்னுடைய புகைப்படங்களை நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அதன் கீழே ஒரு ரசிகர், "சூரியை ஏமாத்தாதீங்க தல. உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும், அந்த சூரி செய்திக்குப் பிறகு உங்களை வெறுக்கிறேன்" எனப் பதிவிட்டார்.

Advertisment

இதனையடுத்து, அப்பதிவிற்குப் பதிலளித்த விஷ்ணு விஷால், "உண்மை இன்னும் வெளிவரவில்லை. யார் யாரை ஏமாற்றினார்கள் என்பது சில நாட்களில் தெரியவரும். யார் நம்பிக்கைத் துரோகம் செய்தார்கள் என்பதுவும் சீக்கிரமாகவே வெளியேவரும். அதன் பிறகு என்னை வெறுப்பதா அல்லது அதைவிட அதிகமாக நேசிப்பதா என்பதை நீங்கள் முடிவு செய்துகொள்ளுங்கள். நான் என் ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

actor vishnu vishal
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe