Advertisment

நில மோசடி விவகாரம்: விஷ்ணு விஷால் ட்வீட்! 

vishnu vishal

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான சூரி, நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை மற்றும் தயாரிப்பாளர் அன்பு வேலன் ஆகிய இருவரின் மீதும் தன்னிடம் பணம் பெற்றுகொண்டு நிலம் வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக வழக்கு தொடர்ந்தார்.

Advertisment

இந்த வழக்கில் கைது செய்யப்படாமல் இருக்க, விஷ்ணு விஷாலின் தந்தை ஓய்வுபெற்ற டிஜிபியுமான ரமேஷ் குடவாலா உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி இருந்தார். திடீரென்று நவம்பர் 9ஆம் தேதி தனது முன்ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார்.

Advertisment

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிடுகையில், “முன்ஜாமீன் மனுவை எனது அப்பா திரும்பப் பெற்றுக்கொண்டார். சூரி மற்றும் தயாரிப்பாளர் அன்புவேலனுக்கு இடையே நடந்த நில ஒப்பந்தத்தில் எங்கள் தரப்பிலிருந்து யாரும் சம்பந்தப்படவில்லை என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். நீதித்துறை, தமிழக முதல்வர் மற்றும் தமிழக காவல்துறை ஆகியவற்றின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது, நீதி நிலைநாட்டப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

vishnu vishal
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe