Advertisment

"உங்களை விரைவில் திரையரங்குகளில் சந்திக்கிறேன்" - விஷ்ணு விஷால் 

hrehd

தமிழ் சினிமாவில் நடிகர் விஷ்ணு விஷால் அறிமுகமாகி நேற்றோடு 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சமூகவலைதளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால். அதில்...

Advertisment

"இது நம்பமுடியாத 12 ஆண்டுகள்!

இப்பயணம் ஒரு மிகச்சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது. என்னுடைய பயம், வலி அனைத்தையும் கடந்து ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்றைப் புதிதாகக் கற்றுக்கொண்டிருக்கிறேன். இந்தப் பாதையில் என்னை ஆதரித்த ஒவ்வொரு ஆன்மாவுக்கும் நன்றி. வரும் ஆண்டுகளில் இன்னும் சாதிப்பதற்கான வாய்ப்பை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் என்னுடைய ரசிகர்கள், பார்வையாளர்களுக்கு என்னுடைய அன்பைப் பகிர்கிறேன்.

Advertisment

'காடன்', 'எஃப்.ஐ.ஆர்', 'மோகன் தாஸ்', 'இன்று நேற்று நாளை 2', இயக்குநர் செல்லாவுடன் பெயரிடப்படாத ஒரு படம் மற்றும் இயக்குநர் கோபிநாத் உடன் ஒரு படம் ஆகியவற்றில் பணிபுரிந்து வருகிறேன். இன்னும் சில அற்புதமான கதைகள் மற்றும் இயக்குநர்களுடன் பணிபுரியவுள்ளேன். கடந்த ஆண்டு நம் அனைவருக்குமே மிகவும் கடினமான ஒரு ஆண்டாக இருந்தது. தனிப்பட்ட முறையிலும் தொழில்ரீதியாகவும் எனக்குப் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால், வாழ்க்கை என்பது தொடர்ந்து முன்னேறிச் செல்வதுதான். தொடர்ந்து அலையுடனோ அல்லது அலையை எதிர்த்தோ நீந்திக் கொண்டேயிருப்போம். உங்கள் மீது மிகுந்த அன்போடு விரைவில் திரையரங்குகளில் சந்திக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

vishnu vishal
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe