Advertisment

‘தனுஷ் 50’ பற்றி சொல்கிறாரா விஷ்ணு விஷால்?

vishnu vishal about dhanush 50

விஷ்ணு விஷால் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் நடித்து வருகிறார். இதில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க விஷ்ணு விஷாலோடு இணைந்து விக்ராந்தும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதையடுத்து சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம் கமிட்டாகியுள்ள நிலையில் அதில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

இதனிடையே தனுஷின் 50வது படத்தில் விஷ்ணு விஷால் நடிக்க கமிட்டாகியுள்ளதாக சமீப காலமாக ஒரு தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் விஷ்ணு விஷால் திடீரெனதனது ட்விட்டர் பக்கத்தில், "துரதிர்ஷ்டவசமாக நான் அந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதாக பரவி வரும் வதந்திகள் அனைத்தும் பொய்யானவை. நான் அதில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என விரும்பினேன். இருப்பினும் அது பற்றி விளக்கம் கொடுக்கிறேன். மற்ற படங்களில் நான் கமிட்டாகியுள்ளதால் இப்படத்தில் என்னால் கலந்துகொள்ள முடியாது. படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். ரசிகர்கள் என்னை மன்னியுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

விஷ்ணு விஷால் எந்த படம் என்பதை குறிப்பிடாவிட்டாலும், ‘தனுஷ் 50’ படத்தை தான் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார் என சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.

actor dhanush actor vishnu vishal D 50
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe