கரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒன்பது லட்சத்தைக் கடந்துள்ளது.அதேபோல இறந்தவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vishnu vishal.jpg)
இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடு திடீரென இரண்டம் இடத்தைப் பிடித்துள்ளது.இனிமேலும் கவனக் குறைவாக இருந்தோம் என்றால் காட்டுத் தீ போல இந்த வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. அப்படிதான் உலகம் முழுக்க பரவியுள்ளது.
இந்நிலையில் பிரபலங்கள் தங்களால் முடிந்த விழிப்புணர்வை சமூக வலைத்தளத்தின் உதவியுடன் செய்துவருகின்றனர்.நடிகர் விஷ்னுவிஷால், இந்தியாவில் கரோனா பாதிப்பு எப்படி உயர்கிறது என்பது குறித்த ஒரு கிராஃபை பகிர்ந்திருக்கிறார்.மேலும் அதனுடன், “மெதுவாகக் கட்டுப்பாட்டை இழந்து வருகிறது இந்தியா. தயவுசெய்து நிலமையின் தீவிரத்தைப் புரிந்துகொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Follow Us