Advertisment

"இதனை மறக்க முடியாது" - மகனை நினைத்து உருகும் விஷ்ணு விஷால்

vishnu vishal aaryan movie first look and motion poster released

தமிழ் சினிமாவில் 'இன்று நேற்று நாளை', 'ராட்சசன்' என வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விஷ்ணு விஷால். அந்த வகையில் முரளி கார்த்திக் இயக்கும் 'மோகன்தாஸ்' படத்தில் நடித்துமுடித்துள்ள விஷ்ணு விஷால் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா தயாரிக்கும் 'கட்டா குஸ்தி' படத்தில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியானது.

Advertisment

இந்நிலையில் விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி 'ஆர்யன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை விஷ்ணு விஷால் தயாரித்து நடிக்கிறார். பிரவீன்.கே இயக்கும் இந்த படத்தில் செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் வாணி போஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. கிரைம் திரில்லராக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது.

Advertisment

இது தொடர்பாக விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், "இப்படத்தின் தலைப்பின் மூலமாக என் படத்தில் என் மகன்இடம்பெற்றிருக்கிறான். இது எனக்கு மறக்க முடியாத தலைப்பாக இருக்கும்"என குறிப்பிட்டுள்ளார். விஷ்ணு விஷால் கடந்த 2010-ஆம் ஆண்டு ரஜினி நட்ராஜ் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பின்பு சில கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இவர்களுக்கு ஆர்யன் என ஒரு பையன் இருக்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து கடந்த ஆண்டு ஜுவாலா குட்டா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு தற்போது அவருடன் வாழ்ந்து வருகிறார் விஷ்ணு விஷால்.

Aaryan movie actor vishnu vishal selvaraghavan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe