vishnu vardhan salman khan update

பட்டியல், பில்லா, ஆரம்பம் என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் விஷ்ணுவர்தன். கடைசியாக இந்தியில் 'ஷெர்ஷா’ படத்தை இயக்கியிருந்தார். இப்படம் நல்ல வரவேற்பைப்பெற்ற நிலையில், இதன் மூலம் இந்தியில் கால் பதித்த அவர், அதன் பிறகு எந்த படமும் இயக்கவில்லை. ஆனால், மீண்டும் இந்தியில் ஒரு படம் இயக்கவுள்ளதாகவும், சல்மான் கான் அதில் நடிப்பதாகவும் தகவல் வெளியானது. மேலும் கரண் ஜோகர் தயாரிப்பதாகவும் கூறப்பட்டது.

Advertisment

இந்த தகவல் பல மாதங்களாக உலா வந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது அது உறுதியாகிவிட்டதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. இது சல்மான் கானின் அடுத்த படமாக இருக்கும் எனவும், வருகிற நவம்பர் முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் மொத்தம் 8 மாதங்கள் எனப் பல்வேறு கட்டங்களாக படப்பிடிப்பு நடக்கவுள்ளதாகவும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisment

மேலும், விரைவில் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அடுத்த ஆண்டு இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதோடு ஆக்ஷன் ஜானரில் இப்படம் பெரிய பொருட்செலவில் உருவாகுவதாகவும் பேசப்படுகிறது.

விஷ்ணுவர்தன், தற்போது தமிழில் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளியை ஹீரோவாக வைத்து ஒரு படம் இயக்கி வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்படுகிறது. இதில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிப்பதாகவும், படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.