vishnu edavan case Transfer to other police station

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் அனைத்து படங்களிலும் இணை இயக்குநராக பணியாற்றியவர் விஷ்ணு இடவன். மேலும்,பாடலாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். மாஸ்டர் படத்தில் 'பொளக்கட்டும் பற பற', விக்ரம் படத்தில் 'போர் கண்ட சிங்கம்', 'நாயகன் மீண்டும்' உள்ளிட்ட பாடல்களை எழுதியுள்ளார்.

Advertisment

இந்நிலையில், விஷ்ணு இடவன் மீது இளம்பெண் ஒருவர், தன்னை திருமணம் செய்துகொள்வதாகத்தெரிவித்து கர்ப்பமானதை தொடர்ந்து தற்போது திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாகக் கூறி சென்னை திருமங்கலத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த பெண்ணும் விஷ்ணு இடவனும் காதலித்து வந்துள்ளதாகவும் அப்போது அந்த பெண் கர்ப்பமான நிலையில் இருவீட்டாரும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

ஆனால், திருமணத்திற்கு விஷ்ணு இடவன் மறுப்பு தெரிவித்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இப்போது அந்தப் பெண்ணின் புகாரை ஏற்றுக்கொண்ட போலீஸார் விஷ்ணு இடவனிடம் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், இருதரப்பிலும் வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்இது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகச்சொல்லப்படுகிறது.