/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vishal_70.jpg)
‘எனிமி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கும் 'வீரமே வாகை சூடும்' படத்தில் விஷால் நடித்துவருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாகடிம்பிள் ஹயாத்தி நடிக்க, வில்லனாக பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் நடிக்கிறார். யோகிபாபு, பி.என்.ஆர். மனோகர், கவிதா, மரியம் ஜார்ஜ், தீப்தி ஆகியோர் படத்தின்முக்கிய கதாபாத்திரங்களில்நடிக்கின்றனர்.விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு, இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டிவருகிறது.
இந்நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்தஅறிவிப்பைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதில்,'வீரமே வாகை சூடும்'திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவித்துள்ளது. சமீபத்தில் வெளியானபடத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்கள்மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png) 
   Follow Us
 Follow Us