‘அரசியலுக்கு வர எல்லா தகுதியுமே உனக்கு இருக்கு...’- விஷாலின்  ‘அயோக்யா’ ட்ரைலர்

சண்டக்கோழி-2 படத்தை தொடர்ந்து விஷால் நடித்து வரும் படம் ‘அயோக்யா’, இப்படத்தின் டீஸர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்தது.

vishal

இந்நிலையில் இன்று மாலை நான்கு மணிக்கு அயோக்யா படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த படம் கடந்த மாதமே வெளிவர இருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், விஷால் நிச்சயத்தார்த்தம் நிகழ்ச்சியால் படம் தள்ளிபோனது. தற்போது படபிடிப்பு முடிவடைந்துவிட்டதால் மே 10ஆம் தேதி வெளி வர இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்த படத்தை ஏ.ஆர். முருகதாஸின் துணை இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கியுள்ளார். விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கும் இந்த படத்தை லைட் ஹவுஸ் மற்றும் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

alt="kanchana" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="ba5052d3-630c-4df8-8318-061e4c997e84" height="194" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/kanchana%203%20336x150%20resize_16.jpg" width="435" />

தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான டெம்பர் படத்தின் தமிழ் ரீமேக் இது என்பது குறிப்பிடத்தக்கது.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/xD66V8295V8.jpg?itok=gkqcGnm0","video_url":" Video (Responsive, autoplaying)."]}

ayogya vishal
இதையும் படியுங்கள்
Subscribe