/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/gk_7.jpg)
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகராக இருந்த அர்ஜுன், வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான அஜித் நடிப்பில் வெளிவந்த‘மங்காத்தா’ படத்தின் மூலம் திரைத்துறையில் தனது செகண்ட் இன்னிங்ஸை தொடங்கினர். இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன், விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ‘நிபுணன்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், தினேஷ் லட்சுமணன் இயக்கும் புதிய படத்தில் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் நடிக்கின்றனர்.இப்படத்தில் நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே. ரெட்டியும், நடிகர் கதிரின் தந்தையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாகும் க்ரைம் த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் கதையாகஇப்படம் எடுக்கப்பட்டுவருகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவுசெய்த படக்குழு, விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தொடங்கவுள்ளது.
Follow Us