vishal chakra

'ஆக்‌ஷன்' படத்தைத் தொடர்ந்து, விஷால் நடித்து வரும் படம் 'சக்ரா'. புதுமுக இயக்குனர் ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் இன்னும் முடிக்கப்படவில்லை. கரோனா அச்சுறுத்தல் முழுவதுமாக முடிந்து, மீண்டும் தமிழ்ப் பட ஷூட்டிங்கிற்கு அனுமதி கிடைத்தவுடன் இப்படத்தின் முழு ஷூட்டிங்கும் இறுதிக்கட்ட பணிகளும் முடிக்கப்படும் என்று லாக்டவுன் சமயத்தில் படக்குழு தெரிவித்தது.

Advertisment

இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியிடப்பட்டது. இதனால் படமும் இந்த நான்கு மொழிகளில் வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளது. அனைத்துத் தென்னிந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகும் முதல் விஷால் படம் இதுவாகும். இதற்கு முன்பு விஷால் படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படும். இந்த முறைதான் மலையாளம் மற்றும் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.

Advertisment

இந்த படத்தை ஓ.டி.டி.யில் ரிலீஸ் செய்ய அனுமதிக்கக் கூடாது என்று ஆக்‌ஷன் படத்தின் தயாரிப்பாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். ஆனால், விஷால் படம் தீபாவளிக்கு கண்டிப்பாக ஓ.டி.டி.யில் ரிலீஸ் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் சென்னையில் தொடங்கியுள்ளது. இன்னும் 7 நாட்கள் ஷூட்டிங் மட்டும் மீதமுள்ள நிலையில், இறுதிக்கட்ட பணிகளை விறுவிறுப்பாக முடித்துஓ.டி.டி ரிலீஸுக்கான பேச்சுவார்த்தையில் படக்குழு ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment