Advertisment

நடிகர் சங்க மண்டபத்தில் திருமணத்திற்கு தயாராகும் விஷால்...

vishal

சென்ற ஆண்டு சென்னை தியாகராய நகர், அபிபுல்லா சாலையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடம் கட்டும் அடிக்கல் நாட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான திரையுலகினர் திரண்டு வந்து விழாவை சிறப்பித்தனர். இதையடுத்து இந்த புதிய கட்டிட நிதிக்காக சென்ற ஆண்டு இறுதியில் மலேஷியாவில் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டு அதில் கிடைத்த வருவாயை வைத்து தற்போது நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. மேலும் இக்கட்டிடம் கட்ட நடிகர், நடிகைகள் பலரும் நிதியுதவி அளித்துள்ளனர். இக்கட்டிடத்தின் சிறப்பு அம்சமாக கட்டிடத்துடன் இணைத்து, ஒரு சிறிய திருமண மண்டபமும், பிரிவிவ் தியேட்டர் ஒன்றும் இணைத்து கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதற்கான பணிகள் முழுவீச்சில் தற்போது நடைபெற்று வருகிறது. இதனை நேரில் சென்று பார்வையிட்ட விஷால் தன் டுவிட்டர் பக்கத்தில் நடிகர் சங்க கட்டிடம் குறித்த தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில்..."நடிகர் சங்க கட்டிடம் அழகாகவும் சிறப்பாகவும் உருவாகி வருகிறது" என பதிவிட்டு அதோடு கட்டிட பணியாளர்களுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். நடிகர் சங்க கட்டிடத்தில் கட்டப்படும் திருமண மண்டபத்தில் தான் தனது திருமணம் நடைபெறும் என்று விஷால் ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment
vishal nadigarsangam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe