Advertisment

‘தீராத விளையாட்டுப் பிள்ளை...’ - இளம்பெண்ணுடன் விஷால்?

vishal walking with girl in new york video viral on internet

Advertisment

மார்க் ஆண்டனி பட வெற்றியைத் தொடர்ந்து தனது 34வது படமான ரத்னம் படத்ஹில்நடித்து வருகிறார் விஷால். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் அடுத்த ஆண்டு கோடையில் படம் வெளியாகும் எனத்தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே அவ்வப்போது தனது படங்களைப் பற்றிய அப்டேட்டுகளையும் அவ்வப்போது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியும் சமூக வலைத்தளங்களில் பதிவு போட்டு வருகிறார் விஷால். அந்த வகையில் கடந்த 18 ஆம் தேதி ஆஸ்திரேலிய தூதரகம் ஏற்பாடு செய்த கிறிஸ்துமஸ் விருந்தில் கலந்து கொண்டதாகத்தெரிவித்திருந்தார். இதையடுத்து விஷால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு அமெரிக்காசென்றுள்ளதாக சொல்லப்படும் நிலையில் நியூயார்க் நகரில் ஒரு இளம் பென்னுடன் விஷால் நடந்து செல்லும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் இளம்பெண்ணுடன் விஷால் நடந்து செல்லும்போது வீடியோ எடுக்கும் நபர், விஷால் எனக் கூப்பிடுகிறார். உடனே கேமராவை பார்த்த அவர் டி-ஷர்ட்டை வைத்து முகத்தை மறைத்தபடி ஓடுகிறார்.

இந்த வீடியோவிற்கு கீழ் பலரும் ப்ரொமோஷன் என கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் விஷால் தரப்பிலிருந்து எந்த ஒரு விளக்கமும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

actor vishal
இதையும் படியுங்கள்
Subscribe