Advertisment

விஜய்யுடன் அரசியல் கூட்டணி ? - மனம் திறந்த விஷால்

vishal in vijay political party

Advertisment

விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்க, வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார். வினோத் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தில் தெலுங்கு நடிகர் சுனில், நடிகை அபிநயா, மலேசிய நடிகர் டி.எஸ்.ஜி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படம் வெளியாகவுள்ளது. படத்தின் டீசர் மற்றும் முதல் பாடலான 'அதிருதா மாமே' வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில்இப்படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சி செங்கல்பட்டில் உள்ள மருத்துவக் கல்லூரியில் நடந்த நிலையில், அங்குள்ள மாணவ, மாணவிகளிடம் படக்குழு உரையாடல் மேற்கொண்டது. அப்போது விஷாலிடம், 'எதிர்காலத்தில் விஜய்யுடன் அரசியலில் இணைந்து செயல்படுவீர்களா' என ஒரு மாணவி கேள்வி கேட்டதைத்தொடர்ந்து, அதற்குப் பதிலளித்த விஷால், "அது கடவுள் தான் நிர்ணயிக்க வேண்டிய விஷயம். ஏற்கனவே எல்லாரும் அரசியல்வாதி தான். என்னைப் பொறுத்தவரை அரசியல் என்பது சமூக சேவை. வியாபாரம் அல்ல. 50 ரூபாய் கொடுத்து ஒருவரின் பசியை ஆற்றினால் நாமும் அரசியல்வாதிதான். விஜய்யுடன் இணைவதற்குக் கடவுள் பாதை அமைத்துக் கொடுத்தால் பார்ப்போம்" என்றார்.

விஷால், விஜய்யின் தீவிர ரசிகர் என்பதும், இப்படத்தின் டீசர் வெளியான நாளில் விஜய்யைச் சந்தித்து வாழ்த்து பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

actor vijay actor vishal Political partie
இதையும் படியுங்கள்
Subscribe