துப்பறிவாளனை தொடர்ந்து நடிகர் விஷால் தற்போது இரும்புத்திரை, சண்டக்கோழி 2 ஆகிய படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த அவன் இவன் படத்தில் மாறுகண் ஏற்று நடித்திருந்த சமயத்தில் அவருக்கு தலை வலி ஏற்பட ஆரம்பித்தது. அதிலிருந்து நீண்ட நாட்களாக தலைவலியால் அவதிப்பட்டு வந்தார் விஷால். மேலும் துப்பறிவாளன் படத்தில் நடித்த போது ஒரு சண்டை காட்சியில் தோளில் காயம் ஏற்பட்டது. அதனால் தலைவலி பாதிப்பு இன்னும் அதிகமானது. அவ்வப்போது சிகிச்சைகள் மேற்கொண்டு படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், சமீபத்தில் சண்டக்கோழி 2 படத்தில் விஷால் நடித்து கொண்டிருந்த போது திடீரென மீண்டும் தலைவலி உண்டானது. இதனால் கடந்த வாரம் டெல்லி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் மேற்கொண்டு அவர் மூட்டு வலியாலும் அவதிப்பட்டு வந்தார்.இதையடுத்து தலைவலி மற்றும் மூட்டுவலி சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற விஷால் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் சிகிச்சை முடிந்து விஷால் பத்து நாட்களில் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Published on 26/02/2018 | Edited on 27/02/2018