/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vish_0.jpg)
தெலுங்கு சினிமாவில் பிரபல தயாரிப்பாளரான கோபால் ரெட்டியின் மகன் பார்கவ். இவர் சமீபத்தில் ஆந்திராவில் வக்காடு எனும் பகுதிக்கு உள்ள தன் இறால் பண்ணைக்கு சென்றுள்ளார். அப்போது அவர் இரவு கடற்கரைக்கு சென்று நீண்ட நேரமாகியும் வராததால் அங்கிருந்த பணியாளர்கள் அவரை நீண்டநேரமாக தேடியும் கிடைக்காததால் பார்கவ் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து அவர்கள் குடும்பத்திற்கு பேரதிர்ச்சியாக பார்கவின் உடல் நேற்று வக்காடு கடற்கரை பகுதியில் கறையொதுங்கியிருந்தது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இது தற்கொலையா, விபத்தா அல்லது கொலையா என போலீசார் விசாரித்து வருகின்றனர். இவர் நடிகர் விஷாலுக்கு நெருங்கிய உறவினர் ஆவார். இதனால் விஷால் அவர் மரணத்திற்கு ட்விட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளதாவது..."என் சொந்த சகோதரனை இழந்துவிட்டேன். நீ தற்கொலை செய்திருக்க கூடாது. உன் பிரச்சனையை நான் தீர்த்திருப்பேன்" என விஷால் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)