Advertisment

"ஆவலுடன் காத்திருக்கிறேன்" - விஷால் வாழ்த்து

vishal tweet about sj suryah web series

தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான எஸ்.ஜே. சூர்யா தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது 'பொம்மை' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து விஷால் நடிக்கும் 'மார்க் ஆண்டனி' படத்தில் வில்லனாகவும் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் 'ஆர்சி 15' படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Advertisment

இதனிடையே எஸ்.ஜே. சூர்யா நடிக்கும் முதல் வெப் சீரிஸ் 'வதந்தி'. இந்த சீரிஸில் இயக்குநர் புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரித்துள்ளனர். இந்தத் தொடர் அடுத்த மாதம் 2ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது.இந்தத்தொடரில் இந்த சீரிஸை ஆண்ட்ரூ லூயிஸ் இயக்க நாசர், லைலா, சஞ்சனா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Advertisment

இந்நிலையில் இந்த சீரிஸின் ட்ரைலர் தற்போது வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இந்த சீரிஸ் வெற்றி பெற தனுஷ், விஷால் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதில் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், "ட்ரைலரை பார்க்கையில் நல்ல ஒரு த்ரில்லிங்காக இருப்பது போல் தெரிகிறது. சீரிஸை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். எஸ்.ஜே. சூர்யா பிரதர் இதில் நடித்திருப்பது கூடுதல் பலம்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

actor vishal
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe